77 நாடுகள் குழுவுக்கு சீனா உறுதியுடன் ஆதரவு
2022-09-24 18:57:35

77 நாடுகள் குழு மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் செப்டம்பர் 23ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயின் சார்பில் உரை நிகழ்த்தினார்

77 நாடுகள் குழுவின் தலைவர் நாடான பாகிஸ்தானின் பணிகளை வெகுவாக பாராட்டிய சாங் ஜுன், 2023ஆம் ஆண்டிற்கான தலைவர் நாடாக தேர்ந்தெடுக்கப்பட்ட கியூபாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கோவிட்-19 தொற்று நோய், புவியமைவு சார் மோதல், காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரியாற்றல் நெருக்கடி உள்ளிட்ட இடர்பாடுகள் மற்றும் சவால்கள் பின்னிப் பிணைந்த நிலையில், 77 நாடுகள் மற்றும் சீனா முன்பை விட மேலும் பெரும் முயற்சியுடன் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், 77 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகள் உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்புக்கான ஒத்துழைப்பில் பங்கெடுத்து, இம்முன்னெடுப்புக்கான நண்பர்கள் குழுவில் இணைய வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.