சியமென் மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் உயர்வு
2022-09-25 17:26:06

இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில், கிழக்கு சீனாவின் கடலோர நகரமான சியமெனுக்கும், பிரிக்ஸ் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 5939 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 26.2 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று சியமென் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.   

இந்த காலகட்டத்தில் முக்கிய இறக்குமதி பொருட்களில் உலோக தாது, விவசாய பொருட்கள், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி  ஆகியவை அடங்கும். இயந்திர மற்றும் மின்சார பொருட்கள் மற்றும் உழைப்பு மிகுந்த பொருட்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிகளில் அடங்கும்.

இவ்வாண்டின் ஆகஸ்டில், பிரிக்ஸ் நாடுகளுடனான சியமெனின் மாதாந்திர வர்த்தகம் 1000 கோடி யுவான் வரம்பை முதன்முறையாகத் தாண்டி, மொத்தமாக 1155 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 56.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.