ஆப்கான் அரசாங்கம் 90 க்கும் மேற்பட்ட முன்னாள் பெண் காவலர்களை பணியமர்த்தியுள்ளது
2022-09-25 17:24:26

ஆப்கானிஸ்தானின் வடக்கு படாக்ஷான் மாகாண நிர்வாகம், 90க்கும் மேற்பட்ட முன்னாள் பெண் காவலர்களை அந்த மாகாண காவல்துறையில் சேர்த்துள்ளதாக படக்ஷான் காவல்துறையின் பயிற்சித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படாக்ஷான் மாகாண காவல் துறை 70க்கும் மேற்பட்ட பெண்  காவலர்களையும், 20 பெண் காவல் அதிகாரிகளையும் பணியில் நியமித்துள்ளது என்று முகமது நூர் சனிக்கிழமை கூறினார்.

புதிதாக சேர்க்கப்பட்ட பெண் காவலர்கள் இம்மாகாண காவல்துறையின் ஒரு பகுதியாக முன்னாள் அரசுக்காக பணிபுரிந்தவர்கள் ஆவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான் நாட்டைக் கைப்பற்றியதை அடுத்து, அவர்கள் வேலையை இழந்தனர்.

பெண் காவலர்கள் இல்லாத காரணத்தினால், காவல்துறையினர்  முறையாக கடமையை நிறைவேற்றுவது, சந்தேகிக்கப்படும் வீடுகள் அல்லது பெண்ணை சோதனை செய்வதோ கடினமாக உள்ளது என நூர் கூறினார்.