77வது ஐ.நா பொது பேரவையின் தலைவருடன் வாங்யீ சந்திப்பு
2022-09-25 18:54:09

நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொது பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்த சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 77வது ஐ.நா பொது பேரவையின் தலைவர் கொரோசியுடன் செப்டம்பர் 24ஆம் நாள் சந்திப்பு நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், பலதரப்புவாதத்தைப் பேணிக்காக்கும் மைய அமைப்புமுறை மற்றும் மிக முக்கியமான மேடையாக ஐ.நா திகழ்கிறது. உண்மையான பலதரப்புவாதத்தை சீனா எப்போதும் கடைப்பிடித்து, ஐ.நா பொது பேரவை தலைவரின் பணிக்கு உறுதியாக ஆதரவு அளித்து வருகிறது. மேலும், ஐ.நாவுடன் தொடர்பை வலுப்படுத்தி,  மேலும் பெரும் கூட்டு ஆற்றலை உருவாக்கச் சீனா விரும்புகிறது என்றார்.

கொரோசி கூறுகையில், ஐ.நா பொது பேரவையின் விவகாரத்தில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த முக்கிய முன்மொழிவுகள், மேலதிக பொது கருத்துக்களை உருவாக்கி, தற்போதைய அறைக்கூவல்களைச் சமாளிப்பதற்கு தீர்வு வழிமுறையை வழங்கியுள்ளன என்று தெரிவித்தார்.