77ஆவது ஐ.நா. பொதுப் பேரவையில் வாங் யீ சொற்பொழிவு
2022-09-25 16:46:51

 

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 24ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் 77ஆவது பொதுப் பேரவையின் விவாதக் கூட்டத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.

வாங் யீ கூறுகையில், தற்காலம், நிறைய சவால்களையும் அதிக நம்பிக்கையையும் கொண்டிருக்கும் காலமாகும். அமைதி மற்றும் வளர்ச்சி என்ற கருப்பொருள் மாறவில்லை. முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான பல்வேறு நாட்டு மக்களின் விருப்பம் முன்பை விட மேலும் வலுவடைந்துள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்மொழிந்த மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தை எப்படி கூட்டாக உருவாக்குவது பற்றி சீனாவின் கருத்துக்கள் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளன. அதாவது, போருக்குப் பதிலாக அமைதி வேண்டும். வறுமைக்குப் பதிலாக வளர்ச்சி வேண்டும். மூடலுக்குப் பதிலாக திறப்பு வேண்டும். எதிர்ப்புக்குப் பதிலாக ஒத்துழைப்பு வேண்டும். பிளவுக்குப் பதிலாக ஒற்றுமை வேண்டும். ஆதிக்கத்துக்குப் பதிலாக நியாயம் வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாகவும் உலகளவில் மிகப் பெரிய வளரும் நாடாகவும் திகழும் சீனா, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பிலும் கால ஓட்டத்திலும் பெரும்பாலான நாடுகளின் பொது நலனிலும் நிலைத்து நின்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தைவான், பண்டைய காலத்திலிருந்தே சீனாவின் உரிமை பிரதேசமாகும். இருகரைகளின் அமைதியான ஒன்றிணைப்புக்கு சீனா தொடர்ந்து நல்லெண்ணத்துடன் இயன்ற அளவில் முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறது. புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, பசுமை, திறப்பு, பகிர்வு ஆகியவை கொண்ட புதிய வளர்ச்சி கருத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. நடைபெற உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு, சீன மக்கள் அனைவரின் விருப்பத்துடன், சீனாவின் எதிர்கால வளர்ச்சிக்குத் பன்முகத் திட்டத்தை வகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.