2024ம் அரசுத் தலைவர் தேர்தலில் பைடன் பங்கெடுப்புக்கு அதிக ஆதரவின்மை
2022-09-26 11:09:08

தி ஹில் நாளேடு 25ஆம் நாள் வெளியிட்ட தகவலில், ஒரு ஆய்வு நிறுவனத்தின் புதிய பொது கருத்து கணிப்பின்படி, 35 விழுக்காட்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான கட்சி சார்பற்ற வாக்காளர்கள் மட்டுமே, 2024ம் ஆண்டு அரசுத் தலைவர் தேர்தலில் பைடன் போட்டியிட விரும்புவதாகவும், 56 விழுக்காட்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், மற்ற வேட்பாளர்கள் போட்டியிட வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தவிரவும், கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 57 விழுக்காட்டினர், பொருளாதாரப் பிரச்சினையைப் பைடன் கையாண்ட அணுகுமுறையை ஆதரிக்கவில்லை. 36 விழுக்காட்டினர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.