போலி தகவல்களை அதிகமாக வெளியிட்ட நாடு அமெரிக்கா
2022-09-26 18:58:55

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணையக் கண்காணிப்பகம் வெளியிட்ட குறிப்பிட்ட அறிக்கை பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 26ஆம் நாள் கூறுகையில், பல ஆண்டுகளாக அமெரிக்கா சமூக ஊடகத்தில் சீனா, ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரான பெரிய பிரசார வலைப்பின்னலை உருவாக்கியுள்ளது. போலி கணக்குகளை நிறுவுவது, ஒதேமாதிரி அம்சங்களைப் பரப்புவது, வேண்டுமென்றே பரபரப்பை உண்டாக்குவது உள்ளிட்ட முறைகளில் அமெரிக்கா அரசியல் பிரசாரத்தையும் வதந்தி பரப்பும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், இந்தப் போலி கணக்குகள் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இரகசிய தகவல் போருக்காக நடத்தப்படுகின்றன என சந்தேகிக்கப்படுவதாக அமெரிக்காவின் பல ஊடகங்கள் அண்மையில் தகவல் வெளியிட்டன என்றும் அவர் கூறினார்.