ரஷியா மீதான தடை நடவடிக்கை ஐரோப்பாவுக்கே கடும் பாதிப்பு
2022-09-26 15:39:30

ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் தடை நடவடிக்கையால் ரஷியாவை விட, ஐரோப்பா தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தடை நடவடிக்கை முற்றிலும் ஒரு தோல்வியாகும் என்று ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ 25ஆம் நாள் அந்நாட்டின் வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தடை நடவடிக்கைகள் ஐரோப்பாவில் பணவீக்கத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. பொது பயன்பாட்டுச் செலவும் உணவு விலையும் கடுமையாக அதிகரித்துள்ளன. பொருளாதாரச் சரிவு ஏற்பட அபாயம் உள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நடவடிக்கைகளால் அமெரிக்கா நலனடைந்துள்ளது என்றார்.