சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் மனித உரிமை பற்றிய கூட்டம்
2022-09-26 17:41:55

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 51ஆவது கூட்டத்தின் போது 2022ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் மனித உரிமை பற்றிய கூட்டம் அண்மையில் இணைய வழியாக சீனாவின் ஷாங்ஹாய் மாநகரில் நடைபெற்றது. சீன மனித உரிமை ஆய்வகத்தின் தலைமையில், ஃபுதான் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு மையம், சுற்றுச்சூழல் மூலவளம் மற்றும் எரியாற்றல் சட்ட ஆய்வு மையம் இக்கூட்டத்தை நடத்தின. சீனாவையும் வெளிநாடுகளையும் சேர்ந்த 10க்கும் மேலான நிபுணர்கள், சுற்றுச்சூழல் ரீதியிலான மனித உரிமை, காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமை ஆகியவை குறித்து விவாதித்தனர்.

வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளின் நலனைச் சமப்படுத்துவது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது பற்றிய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாகும். வாழும் உரிமை மிக முக்கியமான மனித உரிமையாகும் என்று இந்திய நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிதா சிங் கருத்து தெரிவித்தார்.