வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம் பாகிஸ்தானுக்கு மொத்தம் 12.5 கோடி யுவானை நன்கொடையாக வழங்கியது!
2022-09-26 16:12:49

வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம், பாகிஸ்தானுக்கு வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப்பணியின் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

26ஆம் நாள் வரை, வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம் மொத்தம் 1 கோடியே 3 இலட்சத்து 72 ஆயிரத்து 400 யுவான் நன்கொடைகளையும் சுமார் 11.4 கோடி யுவான் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் திரட்டியுள்ளது.

தற்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவிப் பொருட்கள் பகுதியாக ஏற்கனவே ஏற்றிச்செல்லப்பட்டன.

இவ்வாண்டின் ஜூன் நடுப்பகுதி முதல் ஆகஸ்டு இறுதி வரை, கனமழையால் ஏற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாகிஸ்தானில் 3 கோடியே 30 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.