© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி குறித்து கட்சி மத்தியக் கமிட்டியின் அமைப்புத் துறையின் பொறுப்பாளர் அண்மையில் அறிமுகம் செய்தார்.
நாடளவில் 38 தேர்தல் பிரிவுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2296 பிரதிநிதிகள், ஒட்டுமொத்தமாக கட்சி மத்தியக் கமிட்டியின் விதிகளுக்குப் பொருத்தமாக உள்ளனர். உயர் சிந்தனை மற்றும் அரசியல் தரம், நல்ல நடத்தை, விவாதத் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ள அவர்கள், தலைசிறந்த கட்சி உறுப்பினர்களாகவும் பரந்த பிரதிநித்துவம் வாய்ந்தவர்களாகவும் விளங்குகின்றனர். மேலும், இந்தப் பிரதிநிதிகளில் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அதிகரிப்பதோடு, சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களின் விகிதம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான மற்றும் பரந்த அடிப்படையையும், விறுவிறுப்பான உயிராற்றலையும் கொண்டுள்ளதை இது காட்டுகிறது. தடையின்றி நிறைவடைந்த இந்தத் தேர்தல் பணி, கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டை சீராக நடத்துவதற்கு முக்கிய அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.