வங்கதேசத்தின் பொருளாதாரத்துக்கு உதவியளித்துள்ள சீனா
2022-09-27 17:28:20

சீன-வங்கதேச தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பு கருத்தரங்கு அண்மையில் டாக்காவில் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் திட்டமிடல் துறையின் இணை அமைச்சர் ஷம்சுல் அலாம் கூறுகையில், வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா பல துறைகளில் உதவியளித்துள்ளது. இதிலிருந்து வங்கதேசம் பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

தற்போது கோவிட்-19 நோய்தொற்று உள்ளிட்ட சவால்களை வங்கதேசம் எதிர்நோக்குகிறது. ஆனால், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் இணைந்துள்ள வங்கதேசம் சீனாவின் ஆதரவுகளைப் பெற்று வருவது நல்ல செய்தி. உலகளவில் பல நாடுகள் சீனாவின் உதவியுடன் வளர்ச்சி அடைந்துள்ளன. மேலதிக சீனத் தொழில் நிறுவனங்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்வதை எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.