நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய் கசிவுக்கு அருகில் நிகழ்ந்த வெடிப்புகள்
2022-09-28 10:15:26

"நோர்ட் ஸ்ட்ரீம் -1", " நோர்ட் ஸ்ட்ரீம் -2" ஆகிய இயற்கை எரிவாயு குழாய்கள், நீருக்கடியில் கசிவு ஏற்பட்ட பகுதியில் இரண்டு சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டதை ஸ்வீடன் அளவீட்டு நிலையம் செப்டம்பர் 26ஆம் நாள் கண்டறிந்தது. நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய் கசிவு "விபத்து" அல்ல, வேண்டுமென்றே உண்டாக்கிய சீர்குலைவு என்று டென்மார்க் தலைமையமைச்சர் மெட்டே ஃபிரடெரிக்சன் 27ஆம் நாளிரவு கூறினார்.

கடலுக்கு அடியிலுள்ள "நோர்ட் ஸ்ட்ரீம் -1", " நோர்ட் ஸ்ட்ரீம் -2" ஆகியவற்றின் மூன்று குழாய்கள் ஒரே நேரத்தில் சேதமடைந்தது முன்னென்றும் கண்டிராதது. தற்போது எப்போது சரிசெய்யப்படும் என்று கூற முடியாது என்று நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரியாவு குழாய் நிறுவனம் 27ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.