உக்ரைன் பிரச்சினையை தைவான் பிரச்சினையுடன் தொடர்பு கொள்வது அரசியல் சூழ்ச்சி:சீனா
2022-09-28 17:31:06

உக்ரைன் நிலைமை பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 28ஆம் நாள் கேள்விக்குப் பதிலளிக்கையில், உக்ரைன் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு எப்போதுமே தெளிவாக உள்ளது. பொறுப்புணர்வு மிக்க நாடான சீனா, அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு பாடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், தைவான் பிரச்சினை, சீனாவின் உள்விவகாரமாகும். அது உக்ரைன் பிரச்சினையிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது. உக்ரைன் பிரச்சினையை தைவான் பிரச்சினையுடன் தொடர்பு கொள்ளும் முயற்சி, தீய நோக்கத்துடன் கூடிய அரசியல் சூழ்ச்சியும், சீனாவின் உள்விவகாரத்தில் கொரூரமான தலையீடும் ஆகும். உக்ரைன் பிரச்சினையை வாய்ப்பாகக் கொண்டு, தைவான் சுதந்திரச் சக்தியின் பிளவு நடவடிக்கையைத் தூண்ட முயலும் செயல்கள் அனைத்தும் தோல்வியடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.