சீன அணு ஆற்றல் தொழில் கண்காட்சி
2022-09-28 16:38:11

சீன அணு ஆற்றல் தொழில் கண்காட்சி செப்டம்பர் 26 முதல் 30ஆம் நாள் வரை வியன்னாவிலுள்ள ஐ.நா நகரத்தில் நடைபெற்று வருகிறது. வியன்னாவிலுள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் இதர சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி வாங்ச்சுன், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர்  க்ரோஸி ஆகியோர் இக்கண்காட்சியில் பங்கெடுத்தனர்.

அமைதி நோக்கிற்காக அணு சக்தியைப் பயன்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனைகளும், உலக அணு ஆற்றல் வளர்ச்சியை முன்னேற்றுவது, பூமியின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது, அழகான தாயகத்தைக் கட்டியமைப்பது ஆகியவற்றுக்கு சீனாவின் பங்களிப்புகளும் இக்கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அணு ஆற்றல் மற்றும் அணு தொழில் நுட்பத் துறையில் சீனா பெற்றுள்ள சாதனைகளை க்ரோஸி வெகுவாகப் பாராட்டினார்.