அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா தங்கள் தவறுகளை தற்சோதனை செய்ய வேண்டும்:சீனா
2022-09-29 16:56:04

அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா சொந்த நாட்டிலுள்ள ஆதிகுடிகள் சகித்துக் கொண்டுள்ள பாகுபாடு மற்றும் அடக்குமுறையை உணர்வுபூர்வமாக தற்சோதனை செய்ய வேண்டும் என்று சீனப் பிரதிநிதி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 51ஆவது கூட்டத் தொடரில் தெரிவித்தார்.

ஆதிகுடிக்களின் உரிமைகள் பற்றிய நிபுணர் இயங்குமுறை பேச்சுவார்த்தையில் அவர் உரை நிகழ்த்திய போது, குறிப்பிட்ட நாடுகளில் ஆதிகுடிகள் நீண்டகாலமாக அலட்சியம், பாகுபாடு, நியாயமற்ற அணுகுமுறை, ஏன் துன்புறுத்தலில் கூட அல்லல்பட்டு வருகின்றனர். இதில் சீனா மிகுந்த கவனம் செலுத்துகிறது. ஆய்வுகளின்படி, அமெரிக்காவிலுள்ள ஆதிகுடி வாக்காளர்கள் அரசியல் விவகாரத்தில் பங்கெடுத்தால் பொதுவாக 11 தடைகளை எதிர்நோகுக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் ஆதிகுடிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் விகிதம் மற்றவர்களை விட 15 மடங்கு அதிகம் என்று தெரிவித்தார்.

இத்தகைய நாடுகள் தற்சோதனை செய்து, ஆதிகுடி மக்களின் உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கையை உண்மையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.