“புதிய யுகத்தில் சீனத் தூதாண்மை”என்னும் செய்தியாளர் கூட்டம்
2022-09-29 16:36:29

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் தற்போதுவரை, புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச லட்சியத்தை முன்னேற்றும் வரலாற்றுப் போக்கில், தோழர் ஷி ச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி மத்தியக் கமிட்டியின் தலைமையுடன், சீனாவின் தூதாண்மைப் பணி இன்னல்கள் மற்றும் அறைக்கூவல்களைச் சமாளித்து, பன்முக சாதனைகளைப் பெற்றுள்ளது.

“புதிய யுகத்தில் சீனத் தூதாண்மை”என்ற தலைப்பிலான செய்தியாளர் கூட்டம் செப்டம்பர் 29ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவுத் துணை அமைச்சர் மா சாவ்ஷு கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங், சீனா மற்றும் உலகத்தின் வளர்ச்சிப் போக்கை நன்றாக அறிந்து கொண்டு, மனித குலத்தின் எதிர்காலம் மற்றும் தலைவிதியை ஆழமாக கருத்தில் கொண்டு, கால எழுச்சியை வெளிப்படுத்தி, மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த பல புதிய கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைத்தார் என்று தெரிவித்தார்.