ஐ.நா இலட்சியத்தின் உறுதியான தூண் சீனா
2022-09-29 16:58:23

நவ சீனா நிறுவப்பட்ட 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,  ஐ.நாவுக்கான சீன பிரதிநிதிக் குழு 28ஆம் நாள் இணைய வழியாக நடத்திய கொண்டாட்ட நடவடிக்கையில் 77ஆவது ஐ.நா பேரவையின் தலைவர் கொரோசி கலந்துகொண்டார். இதில் அவர் கூறுகையில்,

ஐ.நா இலட்சியத்தின் உறுதியான தூணாக சீனா எப்போதுமே விளங்குகிறது. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, அமைதியைப் பேணிக்காப்பது ஆகிய துறைகளில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.

ஐ.நா பொது செயலாளர் அலுவலகத்தின் தலைவர் ராத்ரே ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸின் சார்பாக கூறுகையில்,

ஐ.நா இலட்சியத்தின் முக்கிய தூணாகவும் சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றும் முக்கிய ஆற்றலாகவும் சீனா திகழ்கின்றது என்றார்.