புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கடமை:ஷிச்சின்பிங்
2022-09-30 17:14:06

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங், புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கடமை என்ற தலைப்பில் எழுதிய முக்கிய கட்டுரை, அக்டோபர் முதல் நாள் வெளியிடப்பட உள்ள ஜுயூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.

தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவது, சீனாவின் மிகப்பெரிய கனவாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டவுடன், இது தொடர்பான வரலாற்று கடமையை ஏற்கத் தொடங்கியுள்ளது. இக்கடமையை நிறைவேற்றும் விதம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த நிலையில் இருந்தாலும், ஆரம்பக் குறிக்கோளை மாற்றாமல், பொது மக்களுக்குத் தலைமை தாங்கி, பெரும் முயற்சிகள் மற்றும் தியாகத்துடன், பல இன்னல்களைச் சமாளித்து பல அற்புதமான சாதனைகளைப் படைத்துள்ளது என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மிகப்பெரிய கனவை நனவாக்கும் விதம், மாபெரும் போராட்டம் நடத்தவும், மாபெரும் திட்டப்பணிகளை மேற்கொள்ளவும், மாபெரும் லட்சியத்தை முன்னேற்றவும் வேண்டும். இவற்றில் கட்சியின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.