பாகிஸ்தானின் வெள்ளத்தடுப்புக்கான சீனத் தரப்பின் உதவிக்கு நன்றி
2022-09-30 09:53:47

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான நிவாரணத் தொகை ஒப்படைப்பு விழா 29ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாதிலுள்ள தலைமை அமைச்சர் மாளிகையில் நடைபெற்றது. பாகிஸ்தானின் வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்குச் சீன அரசு மற்றும் மக்கள் முழு ஆதரவளிப்பதற்கு அந்நாட்டுத் தலைமை அமைச்சர் ஷாபாஸ் ஷெரீஃப் நன்றி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மேலதிக மக்களுக்கு உதவியளிக்க, சீனத் தொழில்நிறுவனங்களின் ஆதரவு மற்றும் வாக்குறுதி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார்.

வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்பட்டது முதல், சீனா உரிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு உதவியளித்து சில தொகுதியான மனித நேய உதவிகளை வழங்கியுள்ளது. அண்மையில் புதிய நிவாரணப் பொருட்கள் அந்நாட்டைச் சென்றடையவிருக்கும் என்று பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் நுங்ரோ தெரிவித்தார்.

பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 29ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, ஜூன் மாதத்தின் மத்தியப் பகுதி வரை, கன மழையால் அந்நாட்டில் 1678பேர் உயிரிழந்தனர். 3கோடியே 30லட்சத்து 40ஆயிரம் பேர் அவதிப்பட்டுள்ளனர்.