தூதாண்மை மூலம் உக்ரைன் நெருக்கடி தீர்வு
2022-10-01 17:33:32

உக்ரைன் நெருக்கடியில் தொடர்புடைய தரப்புகள் கட்டுப்பாட்டுடன் இருந்து, நிலைமையைத் தீவிரமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்த்து, தூதாண்மை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜுன் வேண்டுகோள் விடுத்தார். செப்டம்பர் 30ஆம் நாள் ஐ.நா.பாதுகாப்பவையில் உக்ரைன் பிரச்சனைக்கான வரைவுத் தீர்மானம் பற்றிய வாக்கெடுப்புக்குப் பிறகு, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வரைவு தீர்மானம் பாதுகாப்பு அவையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், ஸபோரிஷியா மற்றும் கெர்சன் ஆகிய பிரதேசங்களில் தங்கள் பகுதிகளை ரஷியாவுடன் இணைக்க நடைபெற்ற பொது வாக்கெடுப்பைக் கண்டித்தது. இந்த வரைவு தீர்மானத்தை ரஷிய நிராகரித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் முதலிய 10 நாடுகள் இந்த வரைவு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா, காபோன், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன.