ரஷியாவின் மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கைகள்
2022-10-01 17:37:02

ரஷியாவின் மீதான பல புதிய தடை நடவடிக்கைகளை அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இவற்றில், ரஷியாவின் ராணுவ வீரர்கள், பெலாரஸின் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 910 பேருக்கு நுழைவிசைவுத் தடையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷியாவின் இராணுவ-தொழில்துறை கூட்டமைப்புடன் தொடர்புடைய தனிநபர் மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு அமெரிக்க நிதி அமைச்சகம் தடை அறிவித்துள்ளது. ரஷியா மற்றும் கிரீமியா தீபகற்பத்திலுள்ள 57 தொழில் நிறுவனங்களை அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்ப்பதாக அமெரிக்க வணிக அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதே நாள், டொனஸ்க், லூஹான்ஸ்க், ஸபோரிஷியா, கெர்சான் ஆகிய 4 பிரதேசங்களை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான கையொப்பமிடும் விழா கிரிம்ளின் மாளிகையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.