நட்புறவு விருது பெற்ற வெளிநாட்டு நிபுணர்கள்-லீக்கெச்சியாங் சந்திப்பு
2022-10-01 16:52:37

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் செப்டம்பர் 30ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் 2022ம் ஆண்டில் சீன அரசு வழங்கிய நட்புறவு விருது பெற்ற வெளிநாட்டு நிபுணர்களைச் சந்தித்துரையாடினார்.

அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த லீக்கெச்சியாங், சீனா மேலும் திறந்த மனத்துடன், உலக அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்து, புத்தாக்கச் சாதனைகளை உலகிற்கு சிறந்த முறையில் வழங்க முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.

நட்புறவின் தூதர்களான வெளிநாட்டு நிபுணர்கள், சீனாவுக்கும் உலகத்துக்குமிடையிலான முக்கிய இணைப்பாகத் திகழ்கின்றனர். பல்வேறு வழிமுறைகளில் சீனாவின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தில் ஈடுபட, வெளிநாட்டு நிபுணர்களை வரவேற்கிறோம் என்றும் லீக்கெச்சியாங் சுட்டிக்காட்டினார்.