இந்தோனேசிய கால்பந்து போட்டியில் ரசிகர்கள் வன்முறை:130 பேர் பலி
2022-10-02 16:43:54

இந்தோனேசியாவில் அக்டோபர் முதல் நாளிரவு நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியின் போது வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் பற்றி விசாரணை செய்து, இப்போட்டியை நடத்திய நிறுவனத்தின் அமைப்புத் திறன் மற்றும் நாட்டில் கால்பந்து போட்டிகளின் பாதுகாப்புப் பிரச்சினையை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டுமென இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஜாவா மாநிலத்தின் மலாங் நகரில் இப்போட்டி நடைபெற்றது. அதில் தங்கள் அணி தோல்வியடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத பல ரசிகர்கள் வேலியைக் கடந்து களத்துக்கு நுழைந்தனர். காவற்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். கலவரம் மற்றும் கூட்ட நெரிசலில் கடும் உயிர் இழப்பு ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் இருவர் காவற்துறையினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.