சீன மக்கள் குடியரசு 73ஆவது ஆண்டு நிறைவுக்கு: பல நாட்டு தலைவர்களின் வாழ்த்துக்கள்
2022-10-02 16:41:10

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 73ஆவது ஆண்டு நிறைவுக்குப் பல நாடுகளின் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 73ஆவது ஆண்டு நிறைவுக்கு நேர்மையான மற்றும் நட்பார்ந்த வாழ்த்துக்கள் என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு சுமூகமாக நடைபெற விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அரசின் சார்பாக சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 73ஆவது ஆண்டு நிறைவுக்கு அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் வாழ்த்து தெரிவித்தார். அனைத்து சீன மக்களும் அமைதியையும் செழுமையையும் பெற வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த சில தசாப்தங்களாக உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைச் சீனா பெற்றுள்ளது. சீனா எப்போதும் சர்வதேசச் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளராக இருந்து வருகின்றது. எதிர்காலத்தில் இரு நாடுகளின் உறவு வலுவாக வளரும் என்று சிங்கப்பூர் அரசுத் தலைவர் ஹலிமா யாகோப் அம்மையார் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், ஜப்பானின் பேரரசர் நடுஹிடொ, தென் கொரிய அரசுத் தலைவர் யின் சக்-யோ, இலங்கை அரசுத் தலைவர் விக்லமசிங்க, பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் ஷெரீம், பிரிட்டன் அரசர் 3ஆவது சால்ஸ் உள்ளிட்ட பலரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.