சீனாவில் புதிய விண்வெளி வீரர்கள் தேர்வுப் பணி துவக்கம்
2022-10-03 16:44:11

சீனாவின் 4ஆவது தொகுதி ஆயத்த நிலை விண்வெளி வீரர்களின் தேர்வுப் பணி அண்மையில் துவங்கியது. இது, சுமார் ஒன்றரை ஆண்டுக்காலம் நீடிக்கும். 12 முதல் 14 ஆயத்த நிலை விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களில் 7 அல்லது 8 விண்வெளி விமானிகள், 5 அல்லது 6 விண்வெளி பொறியியலாளர்கள் மற்றும் கலச்சுமை நிபுணர்கள் அடங்குவர். கலச்சுமை நிபுணர்கள், விண்வெளி அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாட்டுத் துறையைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்களிடமிருந்து தேர்வு செய்யப்படுவர். முதன்முறையாக ஹாங்காங் மற்றும் மக்கௌ பிரதேசங்களில் கலச்சுமை நிபுணர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.