சீனாவில் இடைவிடாமல் மேம்படுத்தியுள்ள முதலீட்டுக் கட்டமைப்பு
2022-10-04 19:10:14

2022ஆம் ஆண்டின் முற்பாதியில் சீனாவின் வெளிநாட்டு வரவு-செலவு அறிக்கையைச் சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் அண்மையில் வெளியிட்டது.

உள்நாட்டு வணிகச் சூழல் இடைவிடாமல் மேம்பட்டுள்ளதுடன், நுகர்வோர் சந்தையில்  பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வணிகர்கள் சீனாவில் முதலீட்டு செய்யும் ஆர்வம் வலுவாக உள்ளது. இந்த ஆண்டின் முற்பாதி  வரை, வெளிநாட்டு வணிகர்களின் நேரடி முதலீட்டின் ஒட்டுமொத்த தொகை, 3 இலட்சத்து 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும். 2012ஆம் ஆண்டை விட 73 விழுக்காடு அதிகமாகும். அதே வேளையில், வெளிநாடுகளில் சீனாவின் நேரடி முதலீட்டுத் தொகை, 2012ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த 50 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட அமெரிக்க டாலரிருந்து 2022ஆம் ஆண்டின் முற்பாதியில் 2 இலட்சத்து 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.