உலகப் பொருளாதாரத்தை மந்தநிலையில் சிக்கியுள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளின் நாணய மற்றும் நிதிக் கொள்கைகள்
2022-10-04 19:12:21

2022ஆம் ஆண்டு வர்த்தக மற்றும் வளர்ச்சி அறிக்கையை ஐ.நா.வின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாடு அக்டோபர் 3ஆம் நாள் வெளியிட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் நாணய மற்றும் நிதிக் கொள்கைகளால், உலகப் பொருளாதாரம் மந்தநிலையிலும் நீண்டகால தேக்கநிலையிலும் சிக்கக்கூடும். இது 2008ஆம் ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் 2020ஆம் ஆண்டில் கரோனா தொற்றுநோய் பாதிப்பை விட கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தை 10 ஆண்டு காலமாகக் கடைபிடித்தாலும், பணவீக்க இலக்குகளை அடைய முடியவில்லை. ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கவும்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.