வரும் ஓர் ஆண்டுக்குள் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி:அபாயம் அதிகரிப்பு
2022-10-19 14:40:59

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான வட்டி விகித உயர்வு கொள்கை காரணமாக, வரும் ஓர் ஆண்டுக்குள் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் அதிகரித்து வருகிறது என்று அமெரிக்காவின் பல செய்தி ஊடகங்களும் உலக மதிப்பீட்டு நிறுவனங்களும் அண்மையில் எச்சரிக்கை விடுத்தன.

அடுத்த 12 மாதங்களில் அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம் 100 விழுக்காடாக இருக்கும் என்பதை உள்ளூர் நேரப்படி 17ஆம் நாள் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டது.

வரும் ஓர் ஆண்டுக்குள் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்குச் சாத்தியம் 63 விழுக்காடு என்று வோல் ஸ்ட்ரீட் நாளேடு வெளியிட்ட தகவல் காட்டுகிறது.