உலகிற்கு மேலதிக வாய்ப்புகளைக் கொண்டு வரும் சீனா:ஷிச்சின்பிங்
2022-10-23 15:26:17

அக்டோபர் 23ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டி, முதலாவது முழு அமர்வு நடத்தி, தேர்தல் மூலம், புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளராக ஷிச்சின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய மத்திய அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி உறுப்பினர்கள், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான சந்திப்பில், ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது சீனா, இரண்டாவது நூற்றாண்டின் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. உள்ளார்ந்த ஆற்றல் மிக்க சீனப் பொருளாதாரம், நிலையான வளர்ச்சி பெறும் போக்கு மாறாது. சீனா, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைப் பன்முகங்களிலும் உறுதியாகவும் ஆழமாக்கி, சொந்த வளர்ச்சி மூலம், உலகிற்கு மேலதிக வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.

மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதும் சுய சீர்திருத்தத்தையும், கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதையும் முன்னெடுக்கும். சீனா, உலகின் பன்னாட்டு மக்களுடன் இணைந்து, அமைதி, வளர்ச்சி, நியாயம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் முதலியவை வாய்ந்த மனித குலத்தின் பொது கருத்துகளை வெளிக்கொணர்ந்து, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காத்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கப் பாடுபடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.