குவாங்வூ மலையில் 20வது சர்வதேச சிவப்பு இலைகள் விழா
2022-10-26 12:00:14

சீனாவின் சிச்சுவான் குவாங்வூ மலையில் 20வது சர்வதேச சிவப்பு  இலைகள் விழா நவம்பர் முதல் நாள் பாட்சொங் நகரில் துவங்க உள்ளது.

குவாங்வூ மலையில், சிவப்பு இலைகளைக் கண்டு மகிழ்வதற்கு 680 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய ஒரு சிறந்த பகுதி உள்ளது. “ஆசியாவின் மிக நீளமான சிவப்புக் கம்பளம்”என்று இப்பகுதி போற்றப்படுகிறது.

மேலும், குவாங்வூ மலை சிவப்பு இலைகள் விழாவின் வரலாறு பற்றிய கண்காட்சியும் இத்துவக்க விழாவின் போது நடைபெறவுள்ளது. ஒளிவீசும் வரலாற்றை மீளாய்வு செய்து, சாதனைகளை வெளிப்படுத்தும் அதேவேளை, சீனாவின் பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறையின் வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கத்துடன், 20 விழாக்கள் பற்றிய காணொளிகளும் நிழற்படங்களும் காட்சிக்கு வைக்கப்படும்.