முதல் 9 மாதங்களில் சீன வேலை வாய்ப்பு நிலைமை
2022-10-28 15:50:05

சீன நகரப்புறத்தில் இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், புதிதாக வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10ஆயிரம் ஆகும். வேலை வாப்புப் நிலைமை ஒட்டுமொத்தத்தில் உறுதியாக இருக்கிறது என்று சீன மனித வளம் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொழில் நிறுவனங்களின் இன்னல்களை எதிர்கொள்வதற்கான கொள்கைகளும் நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படுவது என்பது, வேலை வாய்ப்பு நிலைமை உறுதியாக இருப்பதன் முக்கிய காரணம். இவ்வமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, செப்டம்பர் திங்கள் வரை, சமூக காப்புறுதியின் சதவீதத்தைக் குறைப்பது, காப்புறுதி கட்டணம் வழங்குவதை ஒத்திவைப்பது, தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம், தொழில் நிறுவனங்களின் சுமை நீக்குவதற்கான குறைக்கப்பட்ட கட்டணம் 28ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது.