புதிய யுகத்தில் சீனாவின் பெய்டோ வெள்ளையறிக்கை வெளியீடு
2022-11-04 15:40:06

புதிய யுகத்தில் சீனாவின் பெய்டோ என்ற வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 4ஆம் நாள் வெளியிட்டது.

இவ்வெள்ளையறிக்கையில், புதிய யுகத்தில் பெய்டோ வளர்ச்சி, உலகின் முதல் தர நிலையிலுள்ள பெய்டோ, அமைப்பு முறை இயக்கத்தின் மேலாண்மை திறன் மேம்பாடு, பயன்பாட்டுத் தொழிலின் தொடர்வல்ல வளர்ச்சி முன்னெடுப்பு, நவீனமயமாக்க மேலாண்மை திறன் உயர்வு, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்குத் துணை ஆகிய 6 பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

எதிர்காலத்தில், மேலும் முன்னேறிய தொழில் நுட்பம் கொண்ட பெய்டோ அமைப்பு முறையை, சீனா அமைக்கும்.  பொது மக்களுக்கு நலன்களைக் கொடுத்து, மனித குலத்தின் முன்னேற்றங்களை முன்னெடுக்கும் விதமாக, இந்த அமைப்பு முறை, உயர் செம்மை மற்றும் பாதுகாப்பு கொண்ட திசையறிதல், புவியிடங்காட்டி மற்றும் நேர சேவையை வழங்கும்.