கியூபா மீதான தடைகளை நீக்க:ஐ.நா வேண்டுகோள்
2022-11-04 10:32:12

பொருளாதாரம், வணிகம், நிதி ஆகியத் துறைகளில் கியூபாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்ற தீர்மானம், நவம்பர் 3ஆம் நாள் ஐ.நா பொதுப் பேரவையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைப் போன்ற தீர்மானம், ஐ.நா பொதுப் பேரவையில் தொடர்ந்து 30 முறையாக அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதர நாடுகளின் சட்ட அதிகாரத்தில் விதிவிலக்குரிமை கொண்ட சட்ட விதிகளையும், வெளிநாடுகளின் அரசுரிமை, தனிநபரின் சட்டப்பூர்வ நலன்கள், வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் சட்ட விதிகளையும், அனைத்து நாடுகளும் வெளியிடவோ, செயல்படுத்தவோ வேண்டாம் என்று இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.