அமெரிக்க டாலர் குறியீடு வீழ்ச்சி
2022-11-05 17:16:26

அமெரிக்காவின் அக்டோபர் மாதத்துக்கான வேலையின்மை விகிதம் உயர்ந்ததால், அமெரிக்க டாலர் குறியீடு 4ஆம் நாள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

6 முக்கிய நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பை அளவிடும் அமெரிக்க டாலர் குறியீடு அன்று 1.81 விழுக்காடு சரிவடைந்து, அந்நிய செலாவணி சந்தையின் கடைசி பரிமாற்றத்தில் 110.8770ஆகக் குறைந்தது.