சீன வளர்ச்சிக்கான புதிய திட்டம் மற்றும் உலக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு என்னும் கருத்தரங்கு
2022-11-06 17:12:19

5வது ஹோங்ச்சியௌ சர்வதேசப் பொருளாதார மன்றக்கூட்டத்தைச் சேர்நத “சீன வளர்ச்சிக்கான புதிய திட்டம் மற்றும் உலக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு” என்ற தலைப்பிலான கருத்தரங்கு நவம்பர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், பரப்புரைத் துறைத் தலைவருமான லீ ஷுலெய் இக்கருத்தரங்கில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில், புதிய யுகத்திலுள்ள சீனா சொந்தமாக வளர்ச்சியடைந்த அதேவேளையில் உலகத்துக்கு நன்மை புரிந்து வருகிறது. பல்வேறு நாடுகளுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, நவீனமயமாக்கப் பாதையை நோக்கி கூட்டாக முன்னேற சீனா விரும்புகிறது. மேலும், பொது மக்களின் நலன்களை அதிகரித்து, உயர் தர வளர்ச்சி மற்றும் உயர் நிலை திறப்பை முன்னேற்றி, உலகின் பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு மேலதிக உயிராற்றல் மற்றும் இயக்காற்றலை சீனா ஊட்டும் என்று தெரிவித்தார்