மெங்தியன் ஆய்வகப் பகுதியில் துவங்கும் சோதனைகள்
2022-11-07 20:17:30

மெங்தியன் ஆய்வகப் பகுதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, இணைப்பு மற்றும் இடமாற்றத்தை தடையின்றி நிறைவேற்றிய பிறகு, சீன விண்வெளி நிலையத்தின் “T” வடிவிலான கட்டமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, மெங்தியன் ஆய்வகப் பகுதியில் உள்ள 8 அறிவியல் சோதனை அறைகள் அடுத்தடுத்து இயங்கத் தொடங்குகின்றன. சுற்றுவட்டப் பாதையில் அவற்றின் சோதனைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த 8 அறைகளில், நேரம் அதிர்வெண் தொடர்பான அறிவியல் சோதனைக்கான 2 அறைகள் உள்ளன. சீஆன், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய மூன்று தரை இடங்களில் அவற்றுக்கான ஆதரவு முறைமைகள் உள்ளன. சீன அறிவியல் கழகத்தின் தேசிய நேர சேவை மையத்தில், ஆய்வாளர்கள் சோதனைப் பணிக்காக ஆயத்தம் செய்து வருகின்றனர்.