செங்ஜியாஷான் காட்சியிடத்தின் அழகான காட்சிகள்
2022-11-07 17:13:35

சீனாவின் சி ச்சுவன் மாநிலத்தின் குவாங்யுவான் நகரத்தின் செங்ஜியாஷான் என்னும் காட்சியிடத்தில் இலையுதிர் காட்சிகள் மிகவும் அழகானவை. “இயற்கையான உயிர்வாயு அகம்”மற்றும் “சிவப்பு நிற இலைகளைக் கண்டு இரசிப்பதற்கான 10 நல்ல இடங்களில் ஒன்று”என்று இக்காட்சியிடம் அழைக்கப்படுகிறது.  


செங்ஜியாஷான் மலையின் மையப் பகுதி சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 1460 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதில் காட்டுப் பரப்பின் விகிதம் 74 விழுக்காட்டை எட்டியுள்ளது. இலையுதிர் காலத்தில் பல்வேறு மரங்கள் வண்ணமயமாக மாறி அழகான காட்சிகளை வழங்குகின்றன.