வறட்சித் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி துவக்கம்
2022-11-08 10:31:41

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் 27ஆவது மாநாட்டின் போது, வறட்சித் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி 7ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட வறட்சித் தடுப்புக்கான உலக முன்னெடுப்பை அமலாக்கும் நோக்கில் இக்கூட்டணி தொடங்கப்பட்டது.

மொத்தமாக 30 நாடுகள் மற்றும் ஐ.நா காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பங்கேற்ற 20 அமைப்புகளும் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளித்துள்ளன.