2022 உலக இணைய மாநாட்டில் நீல அறிக்கைகள் வெளியீடு
2022-11-09 19:10:34

2022ஆம் ஆண்டு உலக இணைய மாநாட்டில், சீன இணைய வெளி கழகம் நவம்பர் 9ஆம் நாள் சீனா மற்றும் உலகின் இணைய வளர்ச்சி பற்றிய இரண்டு நீல அறிக்கைகளை வெளியிட்டது.

2022ஆம் ஆண்டிற்கான சீன இணைய வளர்ச்சி அறிக்கையில்,  கடந்த ஓராண்டில் சீன இணைய வளர்ச்சியின் புதிய முன்னேற்றம் மற்றும் புதிய சாதனைகள் முக்கியமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டிற்கான உலக இணைய வளர்ச்சி அறிக்கையில், உலக இணைய வளர்ச்சி நிலைமை பற்றி மீளாய்வு செய்யப்பட்டதோடு, சிக்கலான சர்வதேச சூழ்நிலையில் வளர்ச்சியை ஊக்குவித்து சவால்களைச் சமாளிப்பதற்காக பல்வேறு நாடுகளின் புதிய நடவடிக்கைகள், புதிய முன்னேற்றம் மற்றும் சாதனைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வறிக்கையில் 5 கண்டங்களில் பிரதிநிதித்துவம் வாய்ந்த 48 நாடுகளின் உள்கட்டமைப்பு, புத்தாக்கத் திறன், தொழில் வளர்ச்சி, இணையப் பயன்பாடு, இணையப் பாதுகாப்பு, இணைய நிர்வாகம் ஆகிய 6 துறைகள் ஆராயப்பட்டன. விரிவான மதிப்பீட்டின்படி, இவ்வாண்டின் தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள் முறையே அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஸ்வீட்டன், நெதர்லாந்து, தென் கொரியா, பிரிட்டன், கனடா, பின்லாந்து, டென்மார்க் ஆகியவை ஆகும்.