சீன சந்தையில் ஆர்வம் காண்பித்து வரும் இந்திய கம்பளம் வியாபாரி!
2022-11-10 16:15:53

இந்திய கம்பளம் வியாபாரியான இம்ரான் ராஹ் என்பவர் 2018ஆம் ஆண்டில் முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில்  பங்கேற்றபோது, தனது தயாரிப்புகளை 18 சதுர மீட்டர் பரப்பளவுடைய சிறிய சாவடியில் காட்சிப்படுத்தினார்.   

இவ்வாண்டு ஐந்தாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் இம்ரான் ராஹ், கிட்டத்தட்ட 100 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று சாவடிகளில் தனது கம்பளம் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து ஐந்து வருடங்களாக சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பங்கேற்று வரும் இம்ரான் ராஹ், கம்பளம் தயாரிப்புகளின் வகைகளையும், தரத்தையும் மேம்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, அவர் கணிசமான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளார்.    

கையால் தயாரிக்கப்பட்ட காஷ்மீர் பட்டு கம்பளங்கள் மற்றும் காஷ்மீர் சால்வைகளுக்கு சீனாவில் மிக பெரிய சந்தை இருக்கின்றது. மேலும், பல நாடுகளில் வணிகம் மேற்கொண்டாலும், சீனா மிக முக்கியமான சந்தையாக திகழ்கிறது என்று ராஹ் கூறினார்.