சீன மற்றும் அமெரிக்காவின் சரியான பாதை:சீன வெளியுறவு அமைச்சகம்
2022-11-14 17:23:18

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 14ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில், நடைபெறவுள்ள சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து கூறுகையில், அமெரிக்காவின் மீதான சீனாவின்  கொள்கை மற்றும் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கின்றது என்று தெரிவித்தார். அமெரிக்காவுடன் இணைந்து ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பது, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறுவது ஆகியவற்றை நனவாக்கச் சீனா பாடுபட்டு வருகின்றது. அதே வேளையில், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டு நலன்களை உறுதியாக பாதுகாக்கும் என்றார்.

நேர்மறையான திசையை நோக்கி பயணித்து, கருத்து வேற்றுமையை உகந்த முறையில் கட்டுப்படுத்தி, சீன-அமெரிக்க உறவு சீரான மற்றும் நிதானமான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதை முன்னேற்ற வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்தது.