சீன-இந்தோனேசிய அரசுத் தலைவர்களின் மனைவிகள் சந்திப்பு
2022-11-17 09:52:02

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் இந்தோனேசிய அரசுத் தலைவரின் மனைவி இலியானாவுடன் நவம்பர் 16ஆம் நாள் பிற்பகல் பாலி தீவில் சந்திப்பு நடத்தினார்.

அப்போது அவர்கள் இந்தோனேசியாவின் பாரம்பரிய பண்பாட்டுக் கலை நிகழ்ச்சி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியைக் கண்டு இரசித்தனர்.

இச்சந்திப்பின் போது, காச நோய், எய்ட்ஸ் நோய் ஆகியவற்றின் சிகிச்சை மற்றும் தடுப்பில் சீனாவின் கொள்கை மற்றும் சாதனைகளை பெங் லீயுவான் அறிமுகம் செய்தார். அதோடு, சமூக பொது நலப்பணியில் இரு நாடுகளும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பொது மக்களின் நலன்களைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.