6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி தொடங்கியது
2022-11-20 17:28:46

6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியும் 26ஆவது சீன குன்மிங் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பொருட்காட்சியும் நவம்பர் 19ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் தலைநகர் குன்மிங்கில் துவங்கியது. 4நாட்கள் நீடிக்கும் நிகழ்வில், 80நாடுகள், பிரதேசம் மற்றும சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், புதிய வாய்ப்பை கூட்டாகப் பகிர்தல், புதிய வளர்ச்சியை ஆலோசித்தல் என்ற தலைப்பைச் சுற்றி பங்கெடுத்துள்ளனர். கெளவரநாடான வங்களதேசம், விருந்தினர் நாடான லாவோஸ் ஆகியவை தங்களது சிறப்பான அரங்குகளை அமைத்துள்ளன. மேலும், தூய்மை எரியாற்றல், பீடபூமியின் நவீன வேளாண்மை, உயிரின மருத்துவம், முன்னேறிய தயாரிப்புத் தொழில், சுற்றுலா மற்றும் பண்பாடு உள்ளிட்ட 13 அரங்குகள் உள்ளன. மூலதனம், தொழில், வணிகப் பொருட்கள், தொழில் நுட்பம் முதலியவற்றுக்கும் இடையேயிலான தொடர்பு நடப்புப் பொருட்காட்சியில் அதிகரிக்கப்படும் என்று 6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சிக்கான அமைப்புக் குழுத் துணைத் தலைவர் லீ ட்சென் யாங் தெரிவித்தார்.

தவிரவும், சீன-தெற்காசிய ஒத்துழைப்புக் கருத்தரங்கு, சீன-தெற்காசிய வணிக கருத்தரங்கு, சீன- இந்தியப்பெருங்கடல் பிரதேச வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக் கருத்தரங்கு உள்ளிட்ட தொடர்நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.