ஆப்பிரிக்காவின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்க வட்டி உயர்வு பாதிப்பு
2022-11-22 17:15:14

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தீவிரமான முறையில் வட்டி விகிதத்தை அதிகரிப்பதால் வளரும் நாடுகளுக்கு அறைகூவல் மேலும் கடுமையானது. இது, ஆப்பிரிக்க கண்டத்தின் பொருளாதாரம் மீட்சியுறுவதையும் பாதிக்கும் என்று கென்யா சிந்தனை கிடங்கைச் சேர்ந்த ஆப்பிரிக்க கொள்கைக்கான ஆய்வாளர் லூயிஸ் என்டிச்சு அண்மையில் சின்ஹூவா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

இவ்வாண்டு மார்ச் முதல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக 6 முறை உயர்த்துள்ளது. அவற்றில் 4 முறை தொடர்ச்சியாக 75 அடிப்படைப் புள்ளிகளை உயர்த்தியுள்ளது. மேலும், இவ்வாண்டுக்குள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரிக்கும் தகவலை சந்தைக்கு வெளியிட்டுள்ளது.

அதன் விளைவாக, உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மேலும் உறுதியற்றதாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் நாணய மதிப்பிறக்கத்தின் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

நாணய கொள்கை வகுத்த போது, உலகளவில் வேறு நாடுகளுக்கு செல்லும் எதிர்மறை விளைவுகளை குறைந்த அளவிலேயே கருத்தில் கொண்டு அமெரிக்கா செயல்பட்டுள்ளது. இந்த பொறுப்பற்ற செயல் பெரிய நாடு என்ற அமெரிக்காவின் தகுநிலைக்குப் பொருந்ததல்ல என்று அவர் தெரிவித்தார்.