ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் புவிச் சாம்பியன்கள் விருது அறிவிப்பு
2022-11-23 16:07:17

ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 2022 புவிச் சாம்பியன்கள் விருது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த விருதானது பசுமை மாற்றம் மற்றும் வளமான எதிர்காலம் ஆகியவற்றை முன்னெடுக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கீழ்நிலை அமைப்புகள் ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 2,200 விண்ணப்பங்களில் இருந்து இறுதியில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். தொழில்முனைவோர் விஷன் பிரிவில் வனஉயிரின உயிரியலாளர் பூர்ணிமா தேவி பர்மன் இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.