இந்தோனேசியாவின் நிவாரணப் பணிக்குச் சீனா உதவியளிக்க விருப்பம்
2022-11-23 18:45:40

இந்தோனேசியாவின் நிலநடுக்க பாதிப்புப் பற்றி சீனா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோக்கா விடோடோவுக்கு 22ஆம் நாள் ஆறுதல் செய்தி அனுப்பினார். சீனாவும் இந்தோனேசியாவும் நட்பு அண்டை நாடுகளாகும். நிலநடுக்க பாதிப்புக்கான இந்தோனேசியாவின் நிவாரணப் பணிக்கு அவசிய ஆதரவு மற்றும் உதவியைச் சீனா வழங்க விரும்புகிறது என்றும் இந்தோனேசிய மக்கள் இந்த இயற்கைச் சீற்றத்தைத் தோற்கடித்து தங்கள் வீட்டை கூடிய விரைவில் சீரமைக்க முடியும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜியன் 23ஆம் நாள் தெரிவித்தார்.

நவம்பர் 21ஆம் நாள் இந்தோனேசியாவின் ஜாவா மாநிலத்தில் ரிக்டர் அளவில் 5.6ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை இதில் 268பேர் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டது.