சர்வதேசப் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்கும் சீனா
2022-11-24 14:16:15

ஐ.நா பாதுகாப்பவையின் 1267 குழு, பயங்கரவாத எதிர்ப்புக் குழு, 1540 குழு ஆகியவற்றின் பணிகளில் பங்கெடுத்து, பயங்கரவாத எதிர்ப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து முன்னெடுக்கும். சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு முறைமையை மேம்படுத்தி, உலகின் அமைதி மற்றும் நிதானத்துக்குச் சீனா புதிய பங்கு ஆற்றும் என்று ஐ.நாவுக்கான சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி கங் ஷுவாங் தெரிவித்தார்.

ஐ.நா பாதுகாப்பவை 23ஆம் நாள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் கூட்டு அறிவிப்பு கூட்டம் நடத்தியது. மேற்கூறிய மூன்று குழுக்களின் பொறுப்பாளர்கள் வழங்கிய அறிக்கைகள் குறித்து கங் ஷுவாங் அவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புக் குழு, மூலவளங்களின் ஒதுக்கீட்டை மேம்படுத்தி, முக்கிய பிரச்சினைகளைக் கவனித்து, ஆப்பிரிக்கா மற்றும் வளரும் நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவதற்கு மேலதிக ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கங் ஷுவாங் குறிப்பிட்டார்.