சீன-மங்கோலிய தலைவர்கள் பேச்சுவார்த்தை
2022-11-29 09:10:09

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 28ஆம் நாள் சீனாவில் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள மங்கோலிய அரசுத் தலைவர்  குரேல்க்சுகுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீனாவும் மங்கோலியாவும் முக்கிய அண்டை நாடுகளாகும். இரு நாடுகளிடையே நீண்டகால நட்பு ஒத்துழைப்புறவை நிலைப்படுத்துவது இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருத்தமானது. மங்கோரியாவுடன் இணைந்து இரு நாடுகளின் பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதன் வழிகாட்டலில், சீன-மங்கோலிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க சீனா விரும்புகிறது என்றார்.

சீன தரப்புடன் அரசியல் பரிமாற்றத்தை மேலும் அதிகரித்து ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரவளித்து தத்தமது வளர்ச்சிப் பாதைக்கு மதிப்பளித்து மங்கோலிய-சீன நட்புறவை மேலும் ஆழமாக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

புதிய யுகத்தில் சீன-மங்கோலிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை முன்னேற்றுவதற்கான கூட்டு அறிக்கையை இரு தரப்பும் வெளியிட்டன.