சீன-லாவோஸ் அரசுத் தலைவர்களின் சந்திப்பு
2022-11-30 20:25:54

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான தொங்லூன் சிசோலிதுடன் நவம்பர் 30ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

“நீண்டகால நிதானம், சுமுகமான நட்புறவு, ஒன்றுக்கொன்று நம்பிக்கை, பன்முக ஒத்துழைப்பு” ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி, சீன-லாவோஸ் பொதுச் சமூகத்தின் கட்டுமானத்தை இடைவிடாமல் ஆழமாக்கி, மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சி மற்றும் பங்காற்றுவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்.